Monday, April 28, 2008

தூக்கம் தவிர்த்திடுவோம்


பூண்டோம் இலட்சியப்பயணம்
பூத்துக் குலுங்குவது எங்கனம்
கண்ட கனவுகளோடு
கண்மூடித்தூங்கி விட்டோமா?

கண்டம் கண்டமாய்
கண்ணீரும் கம்பலையுமாய்-நாம்
துண்டங்களாகும் உறவுகளுக்காய்
துடித்தழுதும் உணரவில்லையா?

முண்டங்களாகி குவியும்-மனிதத்தை
முடிவுக்குக் கொணரல் எவ்வழி
சண்டையிலே இளைத்தவரா நாம்
சரணாகதி அடைவதற்கு

குண்டு போடும் வானூர்தியை-எம்
குடிலுக்குள் வர ஏன் விட்டோம்
துண்டுகளாக நொருக்கி விட முடியாமலா-இல்லை
தூங்கிவிட்டோம் கரம் இணைக்க

கொண்டு வந்த தென்ன-இக்
கொடுமை மிகு அகதி வாழ்வுக்காய்
நண்டு போல சுருங்கி வாழ்வதுதான்
நாகரீகமானதென்றால்-நம்தேச
வண்டினங்கள் கூட -எம்மை
வசைபாடித் திரியாதா?

பிண்டம் கொடுத்தொடு கிரிகை செய்தால்
பெற்றவர் கடன் தீருமா?
முண்டு கொடுத்து நிற்போம்
முழுமனதோடு ஈழத்தாய்க்காக

தண்டம் கேட்க வந்தோர்
தலையெல்லாம் சிதறுமென்று
உண்ட சோற்றின் மேல்
உறுதியிட்டு சங்கமிப்போம்
தலைத்தீவான்

No comments: